எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க அதிரடி.. பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ்தாஸுக்கு முக்கியப் பதவி..!

By vinoth kumarFirst Published Oct 1, 2020, 2:13 PM IST
Highlights

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ்தாஸ், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசுஅறிவித்துள்ளது.

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ்தாஸ், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசுஅறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி லஞ்ச ஒழித்துறை கூடுதல் டிஜிபியாகவும், அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுவதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

அதில் ராஜேஷ் தாஸ், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும், தற்போது வணிக வரித்துறை செயலாளருமான பீலா ராஜேஷின் கணவராவர். ராஜேஷ் தாஸ் 1989-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர் பல மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சென்னை புறநகர் காவல் ஆணையர், கடலோர காவல்படை இயக்குநர், தென் மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை இதற்கு முன் ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ். வகித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் அமலாக்கத்துறையில் ஏ.டி.ஜி.பி.யாக இவர் பணியாற்றியிருக்கிறார்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தேவர் குருபூஜையின் போது ஏற்பட்ட மோதல், பரமக்குடி கலவரம், முல்லைப்பெரியாறு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளித்தவர் இவர். மேலும், கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிஸம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தென் மண்டல ஐ.ஜியாக இருந்த போது துணிச்சலுடன் ஒடுக்கியவர் ராஜேஷ் தாஸ்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ராஜேஷ்தாஸ் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!