மாநகர பேருந்தில் தொங்கியபடி, கால்களை தரையில் தேய்த்து பள்ளி மாணவர்கள் அட்டகாசம்.. கண்டித்த ஓட்டுநருக்கு அடி.!

Published : Sep 30, 2021, 05:12 PM IST
மாநகர பேருந்தில் தொங்கியபடி, கால்களை தரையில் தேய்த்து பள்ளி மாணவர்கள் அட்டகாசம்.. கண்டித்த ஓட்டுநருக்கு அடி.!

சுருக்கம்

சென்னை எம்கேபி நகரில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கி மாநகர பேருந்து 2A நேற்று யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது நிறுத்தத்தில் நின்றி பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். 

சென்னை யானைகவுனியில் பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்கள் கம்பியை பிடித்துக் கொண்டுஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. 

சென்னை எம்கேபி நகரில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கி மாநகர பேருந்து 2A நேற்று யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது நிறுத்தத்தில் நின்றி பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். மேலும், சில மாணவர்கள் பேருந்தின் கம்பியை பிடித்துக்கொண்டு சாலையில் கால்களை தேய்த்துக் கொண்டே ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்டனர். 

இதனை பேருந்தில் இருந்த பயணிகள் கண்டித்ததால் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கண்டித்தனர். மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில் ரைலாகி வருகிறது. இதுகுறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, அண்ணாசதுக்கத்தில் இருந்து பெரம்பூர் சென்ற பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் கல்லால் தாக்கி விட்டு தப்பியோடிவிட்டனர். படியில் தொங்கி கொண்டிருந்த மாணவர்களை ஓட்டுநரும், நடத்துநரும் உள்ளே வரும்படி வலியுறுத்தினர். அவர்கள் பேச்சை கேட்காத மாணவர்கள் படியில் தொங்கிய படியே வந்தனர். பின்னர், பேருந்து நிறுத்தி விட்டு மாணவர்களை உள்ளே செல்லுமாறு வற்புறுத்தியபோது அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், காயமடைந்த ஓட்டநர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!