சென்னை கோயம்பேட்டில் பயங்கரம்.. ஒடும் அரசு பேருந்தில் பயங்கர தீ விபத்து.. அலறியடித்து ஓடிய பயணிகள்..!

Published : Sep 29, 2021, 12:06 PM ISTUpdated : Sep 29, 2021, 12:09 PM IST
சென்னை கோயம்பேட்டில் பயங்கரம்.. ஒடும் அரசு பேருந்தில் பயங்கர தீ விபத்து.. அலறியடித்து ஓடிய பயணிகள்..!

சுருக்கம்

சென்னை கோயம்பேடு அருகே இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் என்ஜினியிலிருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பயணிகள் அனைவரையும் உடனே இறங்க சொன்னார். 

திருச்சியில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.

சென்னை கோயம்பேடு அருகே இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் என்ஜினியிலிருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பயணிகள் அனைவரையும் உடனே இறங்க சொன்னார். இதனால், பயணிகள் அலறியடித்துக்கொண்டு இறங்கினர். அடுத்த ஒரு சில நிமிடங்களில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது.

ஓட்டுநர் பயணிகளை உடனடியாக பேருந்தில் இருந்து இறங்க சொன்னதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். உடனே தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!