Hibox Scam: ஹைபாக்ஸ் செயலி மூலம் முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி வாக்குறுதி அளிக்கப்பட்டு மோசடி நடந்துள்ளது. யூடியூபர்கள், பாலிவுட் பிரபலங்கள் விளம்பரம் செய்ததால் 30,000க்கும் மேற்பட்டோர் ஏமாந்துள்ளனர். டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைபாக்ஸ்(HIBOX) என்ற மொபைல் ஆப் நூதன முறையில் மக்களை கவருவதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டுள்ளனர். குறிப்பாக முதலீடு செய்த பணத்திற்கு தினமும் 1% முதல் 5% வரை வட்டி கிடைக்கும் என்ற உறுதியின் பேரில் பலர் செயலியில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஒரு மாதத்தில் முதலீடு செய்த பணத்திற்கு 30% முதல் 90% வரை உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்று செயலி உறுதியளித்தது.
இந்த செயலி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக யூடியூபர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரை பயன்படுத்தி விளம்பரம் செய்ததன் மூலம் 30,000க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர். குறிப்பாக பாலிவுட் நடிகர் பரியா சக்கரபோர்த்தி, யூடியூபர் எல்விஷ் யாதவ், காமெடி நடிகை பாரதி சீன் மற்றும் சமூக வலைதள இன்புளுயஸ்ர்கள் பல விளம்பரம் செய்து மக்கள் ஏமாற காரணமாக இருந்ததால் அவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராக டெல்லி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: வங்கியில் கூட்டத்தை நினைத்து டென்ஷன் வேண்டாம்: வங்கிகளில் பணியமர்த்தப்படும் சிட்டி ரோபோகள்
குறிப்பாக டெல்லி சைபர் கிரைமில் உள்ள ஐஎஃப்எஸ்ஓவின் சிறப்பு பிரிவு மூலமாக இந்த மோசடி விசாரணை செய்யப்பட்டு வருகிறது. டெல்லி காவல்துறையினருக்கு மட்டும் 89 பேர் புகார் அளித்துள்ளனர். தேசிய சைபர் குற்றப் பிரிவு இணையதளத்தில் இருந்து 488 புகார்கள் வந்துள்ளன. இஸ்பஸ் மற்றும் போன் பே ஆகிய பணப்பரிவர்த்தனை நிறுவனங்களில் ஹை பாக்ஸ் செயலி நடத்தி வந்த மோசடி நபர்களின் கணக்கை டெல்லி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நாட்டின் மிகப்பெரிய ரயில் சந்திப்பு நிலையம் எது தெரியுமா? 2வது இடத்தில் நம்ப மாம்பழம் சிட்டி
இந்த தொடர் விசாரணையில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிவராம் ஜெயராமன் என்பவர் ஹை பாக்ஸ் செயலியின் இந்திய இயக்குனர்களில் ஒருவராக செயல்பட்டு இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. சுற்றுலா எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி இயக்குனராக இருந்து வந்துள்ளார். அவரது மொத்தம் 4 கணக்குகளில் இருந்த 18 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஐ பாக்ஸ் செயலியின் இயக்குனராக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்ட சிவ்ராமை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சென்னையில் இந்த மோசடியில் யார் யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.