‘பப்ஜி’ மதன் யூ-டியூப் சேனல் முடக்கம்... பதறியடித்துக் கொண்டு செக் செய்த மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 21, 2021, 12:58 PM ISTUpdated : Jun 21, 2021, 01:49 PM IST
‘பப்ஜி’ மதன் யூ-டியூப் சேனல் முடக்கம்... பதறியடித்துக் கொண்டு செக் செய்த மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சுருக்கம்

மதனின் யூ-டியூப் சேனல்களை முடக்கும் படி யூ-டியூப் நிர்வாகத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியிருந்த நிலையில், அவருக்கு சொந்தமான Madan, Toxic Madan 18+, PUBG Madan Girl Fan, Richie Gaming YT யூ-டியூப் சேனல்களும் தற்போது முடக்கப்பட்டுள்ளன. 

ஆன்லைன் கேம்களில் யுத்திகளை கற்றுக்கொடுப்பதாக கூறி யூ-டியூப் சேனல்களை நடத்தி வந்த மதன் என்பவர் சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக பேசுதல், பண மோசடி என பல புகார்களின் அடிப்படையில் தேடப்பட்டு வந்தார். தலைமறைவான மதனை பிடிக்க சேலம் சென்ற போலீசார் அவருடைய மனைவியும், யூ-டியூப் சேனல் அட்மினுமான கிருத்திகாவை கைது செய்தனர். இதையடுத்து தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனும் தனிப்படை போலீசிடம் சிக்கினார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதனை, வரும் 3-ஆம்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இதையும் படிங்க: ரவிக்கை இல்லாமல் தெறிக்கவிட்ட ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா... கிராமத்து லுக்கில் கிக்கேற்றும் போட்டோஸ்...!

கைதான மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தாம்பரம், பெருங்களத்தூரில் தலா ரூ 45 லட்சம் மதிப்பில் 2 வீடுகள் இருப்பதாகவும், 2 ஆடம்பரக் கார்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைககளை மதன் வாங்கிக் குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுப்பற்றியும் விசாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி ஆபாசமாக பேசி பப்ஜி மதன் சேர்த்து வைத்த அனைத்தையும்போலீசார் பறிமுதல் செய்தனர், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. 

மேலும் மதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவரது லேப்டாப்களில் பதிவு செய்து வைத்திருந்த 700 ஆபாச வீடியோக்களும், யூ-டியூப் மூலம் வெளிவராமல் முடக்கப்பட்டது. மதனின் யூ-டியூப் சேனல்களை முடக்கும் படி யூ-டியூப் நிர்வாகத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியிருந்த நிலையில், அவருக்கு சொந்தமான Madan, Toxic Madan 18+, PUBG Madan Girl Fan, Richie Gaming YT யூ-டியூப் சேனல்களும் தற்போது முடக்கப்பட்டுள்ளன. 

 

இதையும் படிங்க: முடியவே முடியாது... மூணு கோடி எக்ஸ்ட்ரா வேணும்... கறார் காட்டும் பிரபல நடிகை...!

மதனின் யூ-டியூம் சேனல்களை பின்பற்றுவதில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் பள்ளி மாணவர்கள் தான் என்பதால் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவர்களுக்கு முடக்கப்பட்ட சேனல்கள் மூலமாகவே அறிவுரை வழங்கியுள்ளனர். எப்படியும் மதனின் யூ-டியூப் சேனல் முடக்கப்பட்டதா? என்பதை கண்டறிய மாணவர்கள் முயல்வார்கள் என்பதால், "பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள்" என்ற வாசத்தை பதிவிட்டு அறிவுரை கூறியுள்ளனர்

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!