நாட்டிலேயே சென்னை தான் முதலிடம்.. மார் தட்டும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!

By vinoth kumarFirst Published Jun 20, 2021, 11:39 AM IST
Highlights

கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பை மறைக்கவோ, மறுக்கவோ எண்ணம் இல்லை. அது சாத்தியமும் இல்லை. முகக்கவசம், தனிமனித இடைவெளி, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கலாம். 2வது அலை குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பை மறைக்கவோ, மறுக்கவோ எண்ணம் இல்லை. அது சாத்தியமும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

புனேவில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்த 3 லட்சத்து 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், சென்னையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டுவரப்பட்டன. இதனை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன்;- தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 1.26 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் 1.17 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்படும்.

படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், 28 நாட்கள் இடைவெளியில் 2ம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் நாட்டிலேயே சென்னை முதலிடம் வகிக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பை மறைக்கவோ, மறுக்கவோ எண்ணம் இல்லை. அது சாத்தியமும் இல்லை. முகக்கவசம், தனிமனித இடைவெளி, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கலாம். 2வது அலை குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

click me!