சென்னை ரயில் நிலையத்தில் மாணவனை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கல்லூரி மாணவர்கள்! அலறிய பயணிகள்.! நடந்தது என்ன?

By vinoth kumarFirst Published Oct 6, 2023, 8:23 AM IST
Highlights

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (20) என்பவர் சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இதே கல்லூரியில் பயிலும் 2-ம் ஆண்டு சீனியர்களுடன் சத்தியமூர்த்திக்கு கடந்த சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சென்னை கடற்கரையில் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் சேர்ந்து முதலாமாண்டு மாணவனை ஓட ஓட அரிவாளால் வெட்டி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (20) என்பவர் சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இதே கல்லூரியில் பயிலும் 2-ம் ஆண்டு சீனியர்களுடன் சத்தியமூர்த்திக்கு கடந்த சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க;- திருமணமான 4 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை.. இதுதான் காரணமா? 3 பக்கம் கடிதம் சிக்கியது..!

இந்நிலையில் சொந்த ஊர் செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சத்தியமூர்த்தி வந்திருந்தார். அப்போது அவரைச் சுற்றி வளைத்த 8 பேர் கொண்ட கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. இதனை கண்ட பயணிகள் அலறியடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். இதில் சத்தியமூர்த்தி  படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது பாதுகாப்பு பணியில் அங்கு ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் அக்கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதனையடுத்து படுகாயமடைந்த சத்தியமூர்த்தி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் திருவள்ளூர் மற்றும் கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்த மாணவர்கள் இடையே இருந்த முன் விரோதம் காரணமாக  இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

click me!