டிபிஐ வளாகத்தில் குவிந்த போலீஸ்.. காலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!

Published : Oct 05, 2023, 07:08 AM ISTUpdated : Oct 05, 2023, 11:29 AM IST
டிபிஐ வளாகத்தில் குவிந்த போலீஸ்.. காலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!

சுருக்கம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்களும், டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி தகுதி தேர்வு தேர்ச்சி ஆசிரியர்களின் கூட்டமைப்பினரும் போராடி வருகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்களும், டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி தகுதி தேர்வு தேர்ச்சி ஆசிரியர்களின் கூட்டமைப்பினரும் போராடி வருகின்றனர். கடந்த 28-ம் நாள் முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில், சிலரது நிலை மோசடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சில ஆசிரியைகள் தங்களின் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி.. இந்த பகுதிகளில் இன்று 5 மணிநேரம் பவர் கட்.!

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு,  ரூ. 10 லட்சம் காப்பீடு திட்டம்  உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார்.  ஆனால் தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க;-  முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு.. பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேளுங்க.. Ex., MLA குமரகுருவுக்கு உத்தரவு!

 

 

இந்நிலையில், டிபிஐ அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் காலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!