7வது முறையாக சென்னை வந்த பிரதமர் மோடி... தி.நகர் முதல் தேனாம்பேட்டை வரை ரோடு ஷோ!

By SG Balan  |  First Published Apr 9, 2024, 6:24 PM IST

மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை உள்ள பாண்டி பஜார் சாலையில் பயணித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.


பிரதமர் மோடி இந்த ஆண்டில் 7வது முறையாக தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வந்திருக்கும் பிரதமர் மோடி, இன்று மாலை சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் 2 கி.மீ. தூரம் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை உள்ள பாண்டி பஜார் சாலையில் பயணித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

மோடி வருகையை முன்னிட்டு சாலையின் இருபுறமும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பாஜக சின்னமான தாமரையைக் காட்டியபடியே மக்களை நோக்கிக் கையசைக்கிறார். பிரதமர் மோடியுடன் மூன்று பாஜக வேட்பாளர்களும் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையும் இருக்கிறார்கள்கள்.

வேட்டி, சட்டை அணிந்து வரும் அவரை வரவேற்று சாலையோரம் இருக்கும் பாஜக தொண்டர்கள் பாரத் மாதா கீ ஜே என்றும் மோடி மோடி என்று கோஷம் போடுகின்றனர். பிரதமரின் வாகனத்தின் மீது மலர் தூவியும் பாஜக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியைக் காட்டுகின்றனர்.

PM Modi : சென்னை வந்தார் பிரதமர் மோடி.. சாலை அணிவகுப்பில் பங்கேற்பு.. உற்சாகத்தில் பொதுமக்கள்..!

பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’வை முன்னிட்டு சென்னை பெருநகரில் ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இவற்றை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். பிரதமரின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தமிழகத்துக்கு 5 முறை வந்த பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன், பாஜக பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்றும், நாளையும் பிரச்சாரம் செய்கிறார்.

அப்போது, மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.வி.பால கணபதி, பெரும்புதூர் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால், காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன், அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் அல்ல; ஜாமீன் வழங்க மறுத்தது டெல்லி உயர் நீதிமன்றம்

இன்று இரவு கிண்டி ராஜ்பவனில் தங்கும் பிரதமர் மோடி, நாளை (10ஆம் தேதி) காலை 10.10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் வேலூர் செல்கிறார். வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர், மதியம் 12.50 மணிக்கு கோவை வரும் மோடி, 1.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை,எல்.முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்து, மதியம் 3.05 மணிக்கு மகாராஷ்டிரா செல்கிறார். பின்னர், அடுத்தடுத்த நாட்களில் தமிழகம் வரும் மோடி, மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பேச இருக்கிறார்.

தென் மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்.. சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!

click me!