மினி ஊரடங்கு கன்ஃபார்ம்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Mar 25, 2021, 1:43 PM IST
Highlights

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து என சுகாதாரத்துறை செயலர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து என சுகாதாரத்துறை செயலர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் படிப்படியாக  தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்  திரும்பியுள்ளனர்.இந்நிலையில் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க  தொடங்கியது. இதனால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. இதனை சுகாதாரத்துறை செயலாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த மாட்டாது. மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனா பாதித்த தெருக்கள், வீடுகள் உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். 

முகக்கவசம் அணியாமல், அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா பரவுவதாகவும், முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன எனவும் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

click me!