குடும்பங்களுக்குள் புகுந்து கும்மியடிக்கும் கொரோனா.. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் பகீர் எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Mar 23, 2021, 1:27 PM IST
Highlights

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உலக காசநோய் தினத்தை ஒட்டி ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழச்சியில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது. 

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு கொரோனா ஏற்படுவது மீண்டும் அதிகரித்துள்ளது. கொளத்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், கோடம்பாக்கம் பகுதியில் குடும்பத்தில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் படிப்படியாக குறையும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் பகுதிகளில் கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு அளித்து பரவலைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முழுவதும் 3 நாளில் மாஸ்க் அணியாத 40,000 பேரிடம் 80 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார். 

click me!