#BREAKING கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள்? மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை.!

By vinoth kumarFirst Published Mar 23, 2021, 12:03 PM IST
Highlights

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. அப்படி இருந்த போதிலும் தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் மேல் பதிவாகி வருகிறது. அதேபோல், தேர்தல் நேரம் என்பதால் கொரோனா அதிகளவில் பரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

நோய் தடுப்பு பணி, தடுப்பூசி போடும் பணியை மேலும் வேகப்படுத்துவது குறித்தும், மாஸ்க் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவை உள்ளதா என்றும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

click me!