
தமிழகத்தில் ஒரேநாளில் 1,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,630, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 6 பேர் என மொத்தம் 1,636 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 633 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,70,003 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,023 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 80,634 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் இன்று 12 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 12,630ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 9,746ஆக அதிகரித்துள்ளது. இதில், செங்கல்பட்டில் 178, கோவையில் 147, திருவள்ளூர் 86, தஞ்சை 72, காஞ்சிபுரம் 56, திருப்பூர் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.