Pm Modi Chennai : "நன்றி சென்னை.. சிறப்பான நாள்.." தி.நகர் ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி..

By Ramya s  |  First Published Apr 10, 2024, 8:19 AM IST

சென்னை ரோடு ஷோ தொடர்பான வீடியோவை பதிவிட்டுள்ள மோடி சென்னைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி சென்னை தி நகரில் ரோடு ஷோ நடத்தினார்.

இதில் பாஜக தலைவர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இரு மருங்கிலும் நின்ற பாஜக தொண்டர்கள் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர். 
சென்னை பனகல் பார்க்கில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வழியாக பாண்டிபஜார் வரை சுமார் ஒன்றரை கி.மீ தூரத்திற்கு திறந்த வாகனத்தில் பேரணியாக சென்ற பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

பாஜகவின் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோருக்கு பிரதமர் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து சென்னை ரோடு ஷோ குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “சென்னை என் மனதை வென்றது! இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன. சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.” என்று நீண்ட பதிவை வெளியிட்டிருந்தார்.

'சென்னை என் மனதை வென்றது!' ரோடு ஷோவில் கூடிய கூட்டத்தைப் பார்த்து உருகிய பிரதமர் மோடி

இந்த நிலையில் சென்னை ரோடு ஷோ தொடர்பான வீடியோவை பதிவிட்டுள்ள மோடி, “ நன்றி சென்னை.. இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாள்” என்று பதிவிட்டுள்ளார்.

Thank you Chennai! Today was special. pic.twitter.com/9PuBCLAdni

— Narendra Modi (@narendramodi)

 

click me!