Kunal Kamra moves Madras High Court :நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என விமர்சித்ததால் சிவசேனா கட்சியினர் ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். இதனால் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கம்ரா மனு தாக்கல் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை துரோகி என கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா! ஹோட்டலில் புகுந்து தாக்கிய சிவசேனா!
இதனால், கொதித்து போன ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து மும்பை போலீசார் கம்ராவுக்கு இரண்டு சம்மன் அனுப்பி மார்ச் 31ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் கம்ரா தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் நிரந்தரமாக வசிப்பவர் என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தின் குணால் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது சொந்த ஊர் விழுப்புரம் என்றும் தான் மும்பை சென்றால் தன்னை போலீசார் கைது செய்வார்கள் என்றும், சிவசேனா தொண்டர்களால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாகவும் எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: குணால் கம்ரா நகைச்சுவைப் பேச்சாளருக்கு எதிர்ப்பு !ஓட்டலை சூறையாடிய சிவசேனா கட்சியினர்!
அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். சுந்தர் மோகனிடம் முறையிட்டார். இந்த வழக்கு விசாரணை இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.