
குணால் கம்ரா நகைச்சுவைப் பேச்சாளருக்கு எதிர்ப்பு !ஓட்டலை சூறையாடிய சிவசேனா கட்சியினர்!
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியன் குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் கிண்டல் செய்தது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது நிகழ்ச்சி நடந்த நட்சத்திர ஹோட்டலை சிவசேனா கட்சியினர் சூறையாடினர்.