சென்னையில் பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் - குவிந்த பக்தர்கள்!!

By Raghupati RFirst Published Mar 17, 2023, 9:07 AM IST
Highlights

தி.நகரில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் இன்று (மார்ச் 17) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா வழங்கிய 6 கிரவுண்ட் நிலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.10 கோடி செலவில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது. 

இந்த கோவிலில் வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலில் மண்டபம், மடப்பள்ளி, புஷ்கரணி , வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைந்துள்ளன. கோயிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகளை கொண்டது. இதில் கலைநயமிக்க சிற்பங்களும் உள்ளன. கருவறையின் எதிரே பலிபீடம் உள்ளது. கோயில் வளாகத்தில் ராமானுஜர், விஸ்வசேனா சிலைகளும் இடம் பெற்றுள்ளன.

இன்று காலை 4 மணி முதல் 5 மணி வரை சதுஸ்தான அர்ச்சனை, ப்ராணபிரதிஷ்டா ஹோமம், பிராணதி தாஷவாயின்யாஸ் ஹோமம், மகாசாந்தி ஹோமம், ஆலய பிரதக்‌ஷிணா நடைபெற்றது. அதனை தொடர்ந்த மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் பத்மாவதி தாயாருக்கு தனி கோயில் கட்டப்பட்டுள்ளது.  கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையில் அன்னதானம் இடைவிடாமல் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு - புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழுத் தலைவர் ஏ.ஜே சேகர் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி, பத்மாவதி தாயார் கோவிலுக்கு வரும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு இலவசமாக திருப்பதி லட்டு வழங்கப்படுகிறது.  கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் இரவு 7.30 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. அடேங்கப்பா இவரா.? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.!!

இதையும் படிங்க..ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

click me!