மழைநீர் வடிகால் பள்ளத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்.. 5 லட்சம் நிவாரணத்தை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

By Raghupati R  |  First Published Oct 23, 2022, 6:22 PM IST

சென்னை பெரு நகர மாநகராட்சியின் அலட்சியத்தால் இளம்  பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிகையில், ‘பத்திரிகை ஊடகத்துறையில்  பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் முன்னேறி வந்த இளம் பத்திரிகையாளர் தென்காசி மாவட்டம் புளியங்குடி சேர்ந்த முத்துகிருஷ்ணன் (24).விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சி திட்ட த்தில் பங்கேற்று நிறைவு செய்து தற்போது புதியதலைமுறை டிஜிட்டலில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று (22-10-2022 ) சனிக்கிழமை இரவு பணி முடித்து சென்னை ஜாபர்கான்பேட்டை  காசி திரையரங்கம் அருகே நடந்து சென்றிருக்கிறார்.அப்போது வாகனம் வந்தபோது சாலையில் ஒதுங்கியதில் அங்கு மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் கால்வாய் பள்ளத்தில்  கீழே விழுந்திருக்கிறார். அரை மணி நேரத்திற்கும் மேல் எவராலும்  கண்டுக்கொள்ளப்படாமல் தவித்த முத்துகிருஷ்ணனை அந்த வழியே சென்ற காவலர் ஒருவர் மீட்டு , ஆட்டோவில் முத்துகிருஷ்ணன் தங்கியிருந்த கந்தன் சாவடிக்கு அனுப்பியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

undefined

அவரது நண்பர்கள் காயங்களுடன் வந்த முத்துகிருஷ்ணனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சுய நினைவை இழந்த முத்துக்கிருஷ்ணனை இன்று காலை  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் வந்து மருத்துவர்கள் சந்தித்து அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து அவருக்கு  அறுவை சிகிச்சை நடந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்று (23-10-2022) பிற்பகலில் உயிரிழந்தார். ஊடகத்துறை கனவுகளோடு வந்த முத்துகிருஷ்ணன் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிரற்ற உடலாக, அவரது தாயாரின் கண்ணீர் கதறல் சொல்லமுடியாத  துக்கத்தைத் தருகிறது.கண்ணீருடன் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம்.

பத்திரிகையாளார் முத்துக்கிருஷ்ணனின் உயிர்பலிக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.மறைந்த பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக செய்தி பிரிவில் செய்தியாளராக பணியாற்றிய திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் (வயது 24), நேற்று (22.10.2022) இரவு சென்னை, ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலத்த காயமடைந்து, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இன்று (23.10.2022) பிற்பகல் திரு. முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். திரு. முத்துகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டதின் கீழ் ரூ.3 லட்சமும், சேர்த்து உயிரிழந்த திரு.முத்துகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..23ம் புலிகேசி போல காங்கிரஸ் கட்சி நிலைமை இருக்கு.. பிறந்தநாளில் புலம்பிய கே.எஸ் அழகிரி!

click me!