சென்னையில் பிடிபட்ட 2.60 கோடி மதிப்பிலான தங்கம்.. விமான நிலையத்தில் பரபரப்பு

By Raghupati R  |  First Published Oct 22, 2022, 8:24 PM IST

மும்பையிலிருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ.2.60 கோடி மதிப்புடைய 5.935 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு, மும்பையில் இருந்து வரும் விமான பயணிகள் பெருமளவு  தங்கம்  கடத்தி வருவதாக,சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை தனிப்படையினர்,சென்னை  உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் தீவிரமாக  கண்காணித்தனர்.

இந்த நிலையில் மும்பையில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் கண்காணித்தனர்.அப்போது  மும்பையை சேர்ந்த மூன்று பயணிகள் ஒரு குழுவாக மும்பையிலிருந்து  சென்னைக்கு வந்தனர். அவர்கள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?

அதன்பின்பு அவர்களின்  கைப்பைகளை சோதனை நடத்திய போது, கை  பைகளுக்குள் 13 பார்சல்களில் தங்க பசை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும்  அவர்களின் ஒருவர் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்க கட்டியையும் பறிமுதல் செய்தனர். இந்த மூன்று மும்பை பயணிகளிடமிருந்து மொத்தம் 3.74 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.63 கோடி. இதை அடுத்து மும்பை பயணிகள் மூன்று பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள, கன்வேயர் பெல்ட் பகுதியில் விமான நிலைய ஊழியர்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தனர். அப்போது கன்வேயர் பெல்ட் 5 அருகே, சுத்தப்படுத்தும் போது அங்கிருந்த மின்சார ட்ரான்ஸ்பார்மர் மூடி திறந்து இருந்தது. அதை  ஊழியர்கள் சரிசெய்ய பார்த்த போது அதனுள்,ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

அவர்கள் வந்து அந்த பார்சலை எடுத்து பிரித்துப் பார்த்தனர். அதனுள் 2.195 கிலோ தங்க பசை இருந்தது. அதன்சர்வதேச மதிப்பு ரூ.96.09  லட்சம். அந்த தங்க பசையையும் பறிமுதல் செய்தனர். கடத்தல் தங்கத்தை, டிரான்ஸ்பார்மருக்குள் மறைத்து வைத்து சென்ற கடத்தல் ஆசாமி யார் ? என்று சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்கின்றனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 2.60 கோடி மதிப்புடைய 5.935 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. மூன்று மும்பை ஆசாமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!

click me!