மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்.. தயார் நிலையில் 4000 படுக்கைகள்.. சுகாதாரத்துறை செயலாளர் பகீர் தகவல்..!

Published : Mar 08, 2021, 04:41 PM IST
மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்.. தயார் நிலையில்  4000 படுக்கைகள்.. சுகாதாரத்துறை செயலாளர் பகீர் தகவல்..!

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த் தொற்று குறைந்ததையடுத்து முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் தவிர்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் 150 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 240க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 200 ரூபாய் அபராத தொகையை வசூல் செய்தார். மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களை போன்று தமிழகத்திலும் நோய் தொற்று அதிகரிக்கக்கூடாது என்பதற்காகதான் எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறது என்றார். 

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 72 மணிநேரங்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இருக்க வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். சென்னையில் கோவிட் கண்காணிப்பு மையங்கள் 4000 படுக்கைகளுடன் தயாராக உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் கூறினார். ஏற்கனவே மாநிலங்களுக்கு இடையேயான இ-பாஸ் திட்டத்தை  மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!