மீண்டும் இ-பாஸ் கட்டாயம்..! தமிழக அரசு அதிரடி உத்தரவு

Published : Mar 07, 2021, 06:12 PM IST
மீண்டும் இ-பாஸ் கட்டாயம்..! தமிழக அரசு அதிரடி உத்தரவு

சுருக்கம்

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது.

நாட்டின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து, மேற்கூறிய மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களின் வழியாக தமிழகம் வருபவர்களுக்கும் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியாக 3 நாட்களுக்கும் குறைவான பயணமாக தமிழகம் வருவோருக்கு குவாரண்டினில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!