நாங்களும் சளைச்சவங்க இல்ல!தனியார் ஹாஸ்பிட்டலுக்கு இணையான மருத்துவம்!கண்ணிலிருந்த மரத்துண்டு வெற்றிகரமாகஅகற்றம்

By vinoth kumarFirst Published Dec 7, 2022, 11:55 AM IST
Highlights

 இடது கண்ணில் பார்வைக் குறைபாடு மற்றும் இரட்டை பார்வை பிரச்சினை இருப்பது தெரிந்தது. மேலும், அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் கண்ணின் உள்ளே மரத்துண்டு ஒன்று கண் நரம்பை அழுத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இளைஞரின் கண்ணுக்குள் 10 செ.மீ மரத்துண்டு என்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் மூக்கின் வழியாக மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர். 

சென்னை வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் முல்லை வேந்தன்(33). கடந்த 21ம் தேதி சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். முதலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இட கண்ணில் பிரச்சனை இருப்பதால் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க;- திருவண்ணாமலை தீபத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய போது பயங்கரம்.. சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பலி..!

அவருக்கு பல்வேறு பரிசோதனை மேற்கொண்டதில் இடது கண்ணில் பார்வைக் குறைபாடு மற்றும் இரட்டை பார்வை பிரச்சினை இருப்பது தெரிந்தது. மேலும், அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் கண்ணின் உள்ளே மரத்துண்டு ஒன்று கண் நரம்பை அழுத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

அவருக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆலோசனை மேற்கொண்டார். இறுதியில் என்டோஸ்கோப்பி சிகிச்சை முறை மூலம் அகற்ற மருத்துவக்குழு திட்டமிட்டது. இதனையடுத்து,  6 மருத்துவர்கள் கொண்ட குழுவால் என்டோஸ்கோப்பி சிகிச்சை முறை மூலம் மூக்கின் வழியாக சுமார் 10 செமீ அளவுள்ள மரத்துண்டை கண்ணிலிருந்து அகற்றினர். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் பார்வை இழப்பு தவிர்க்கப்பட்டது.  சிகிச்சைக்கு பிறகு அவருடைய பார்வைக் குறைப்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருந்தால் பல லட்சங்கள் செலவாகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  வீடியோ பதிவு செய்த படி 114 கி.மீ வேகத்தில் பைக்கில் சென்ற போது விபத்து.. படுகாயமடைந்த இளைஞர்கள் உயிரிழப்பு.!

click me!