குத்தகை திட்டம் ஒத்துவராது! சென்னை மெட்ரோவுக்கு 42 ஓட்டுநர் இல்லா ரயில்களை வாங்க முடிவு

By SG Balan  |  First Published Apr 19, 2023, 7:14 PM IST

மெட்ரோ ரயில் திட்டச் செலவைக் குறைக்க ரயில்களை குத்தகைக்கு எடுக்கும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டு புதிய ரயில்களை வாங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.


ரயில்களை குத்தகைக்கு எடுக்கும் திட்டம் சாத்தியமற்றது என கண்டறியப்பட்டுள்ளதால், 42 ஓட்டுனர் இல்லாத ரயில்களை வாங்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

சென்னையில் 118.9 கி.மீ. தொலைவுக்கான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதையில் 138 மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த 2வது கட்ட மெட்ரோ வழித்தடம் 2026ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

மெட்ரோ ரயில் திட்டச் செலவை 89,000 கோடியில் இருந்து 61,843 கோடியாகக் குறைப்பதற்கான வழிகளில் ஒன்றாக 42 ரயில்களை குத்தகைக்கு எடுக்கும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. மெட்ரோ குத்தகைக் காலம் முடிந்த பிறகு வேறு இடங்களில் அவற்றைப் பயன்படுத்த முடியாது என்பதால் ரயில்களை குத்தகைக்கு எடுக்கும் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நிறுவனம் கைவிட்டுள்ளது.

நடிகையின் கன்னத்தைக் கிள்ளிய எடியூரப்பா! சூடுபிடிக்கும் கர்நாடகா தேர்தல் களம்!

மெட்ரோ ரயில்கள் ஏன் குத்தகைக்கு விடப்படுவதில்லை என்பதைக் கண்டறிய உலகெங்கிலும் உள்ள ரயில் உற்பத்தியாளர்களுடன் மெட்ரோ நிர்வாகம் ஆலோசனை நடத்தியுள்ளது. அதில், மெட்ரோ ரயில்கள் ஒரு நகரம் அல்லது ஒரு வழித்தடத்திற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அவற்றை திரும்பப் பெற்று வேறு இடங்களில் பயன்படுத்த முடியாது எனத் தெரியவந்துள்ளது என சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

இருப்பினும், ரயில்வேயால் இயக்கப்படும் நீண்ட தூர ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் குத்தகைக்கு விடப்படலாம். ரயில்வே சிக்னல் மென்பொருள் ஒரே மாதிரியாக இருந்தால் ரயில்களை வேறு இடங்களிலும் பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

"இந்த ரயில்களை வாங்குவதற்கு சுமார் 1,000 கோடி தேவைப்படலாம். மாநில அரசாங்கத்துடன் நாங்கள் விவாதித்துள்ளோம். அதற்கான செலவை மாநில அரசே ஏற்க வாய்ப்பு உள்ளது. அதற்கு விரைவில் டெண்டர்களை வெளியிட வேண்டும்" என மெட்ரோ அதிகாரி கூறுகிறார்.

சர்ச்சையில் சிக்கிய ஐ.நா. வரைபடம்! இந்தியா மேப்பில் ஜம்மு காஷ்மீர், லடாக்கை காணும்!

2021ஆம் ஆண்டு டிசம்பரில் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டபோது, ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே அதற்கு விண்ணப்பித்து பதிலளித்தது. வேறு நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டாத காரணத்தால் அப்போது வெளியிட்ட டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையின்படி, 118.9 கிமீ நீள மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கு 414 கோச்கள் அல்லது மூன்று பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் 2025ஆம் ஆண்டுக்குள் தேவைப்படும். இதுவே அடுத்த 30 ஆண்டுகளில், 762 கோச்கள் அல்லது மூன்று பெட்டிகள் கொண்ட 254 ரயில்கள் அல்லது ஆறு பெட்டிகள் கொண்ட 127 ரயில்கள் தேவைப்படும்.

"சிறிய அளவில் அதிக ரயில்களை அடிக்கடி இயக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆரம்பத்தில், 3 பெட்டிகள் கொண்ட ரயில்களாக இருக்கும். பயணிகளின் பயன்பாடு அதிகரிக்கும்போது 6 பெட்டிகள் கொண்ட ரயில்கள் கொண்டுவரப்படும். பயணிகள் அதிக அளவில் வந்துசெல்லும் நேரத்தில் இரண்டு வகையான ரயில்களையும் இயக்குவோம்" என மெட்ரோ ரயில் அதிகாரி சொல்கிறார்.

ரூ.1000 க்கு 7.5 சதவீதம் வட்டி! சிறப்பு சேமிப்புத் திட்டம்... பெண்களுக்கு மட்டும்!

click me!