கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு பெயர் இதுதான்.. திறப்பு குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published Apr 14, 2023, 6:48 AM IST

சென்னை, பிராட்வேயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகரித்ததால் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டப்பட்டது. 


கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என அழைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 

சென்னை, பிராட்வேயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகரித்ததால் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- டாஸ்மாக் விற்பனை நேரம் நீட்டிக்கப்படுமா? காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கையும் செந்தில் பாலாஜி ரியாக்‌ஷனும்..!

குறிப்பாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணி தற்போது முழுமை அடைந்துள்ளது. இந்நிலையில், பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்தது.

இதையும் படிங்க;-  செந்தில் பாலாஜியை விமர்சித்து புகைப்படம் வெளியிட்ட பாஜக மாநில நிர்வாகி..! அதிரடியாக கைது செய்த போலீஸ்

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 3ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்த பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையம் என அழைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

click me!