கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு செம்ம ‘குட் நியூஸ்’... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 19, 2021, 1:34 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. 

இன்றைய வழக்கு விசாரணையின் போது அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் தரப்பிலிருந்து சிறப்பு அரசு பிளீடர்கள் பால ரமேஷ், எல்.பி.சண்முகசுந்தரம், மனுதாரர்கள் தரப்பிலிருந்து பிரகாசம் உள்ளிட்டோர் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இன்று தீர்ப்பு வழங்கினார். 

 

இதையும் படிங்க: “நீயும், நானும் கருப்பு... குழந்தை மட்டும் எப்படி சிவப்பு?”... மனைவி மீதான சந்தேகத்தால் கணவன் செய்த கொடூரம்!

அதில், கூட்டுறவு சங்கங்களில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு வழக்கு இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் இதேபோன்ற தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை 8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும்" என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

click me!