#BREAKING ஏசி ஆம்னி பஸ்களை இயக்க அனுமதி.. ஆனால் இந்த வயது உடையவர்களுக்கு மட்டும் தடை.!

By vinoth kumarFirst Published Feb 19, 2021, 1:14 PM IST
Highlights

குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் 702 பேருந்துகள் கொரோனா தாக்கத்தின் காரணமாக குளிர்சாதன வசதியுடன் இயங்கக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இந்நிலையில், தற்போது குளிர்சாதன வசதியுடன் இயங்கக் கூடிய பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கொரோனா பரவலைத் தடுக்க குளிர்சாதன வசதியுடன் பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் பயணிக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் 24 - 30 டிகிரி செல்சியஸ் அளவிலேயே குளிர்நிலையை வைத்திருக்க வேண்டும் என்றும், கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கான விதிமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி முதல் தமிழக அரசுக்குச் சொந்தமான  குளிர்சாதன வசதி கொண்ட 702 பேருந்துகளை இயக்காததால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குளிர் சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளில் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. 

click me!