லாக்டவுனில் கல்லா கட்டிய பிசினஸ்... வீட்டிலேயே பீர் தயாரித்த பெண்ணை வீடு புகுந்து குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 18, 2021, 5:39 PM IST
Highlights

இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் சத்தமே இல்லாமல் வீட்டிலேயே பீர் தயாரித்து வந்த பலே பெண்ணை போலீசார் வீடு புகுந்து கைது செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் யூ-டியூப் வீடியோ பார்த்து மது தயாரிக்க முயற்சி, போதைக்காக பினாயில், பெயிண்ட் தின்னர் குடித்து உயிரிப்பு ஆகிய செய்திகள் அதிகம் வெளியாகின. இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் சத்தமே இல்லாமல் வீட்டிலேயே பீர் தயாரித்து வந்த பலே பெண்ணை போலீசார் வீடு புகுந்து கைது செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருவொற்றியூர் குப்பம் அருகே ஜெ.ஜெ.நகரில் வீட்டிலேயே மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதேபகுதியைச் சேர்ந்த மேரி என்ற பெண்ணின் வீட்டை போலீசார் திடீரென சோதனையிட்டனர். அப்போது திராட்சை மற்றும் கேரட் கூழ் உடன் ஈஸ்ட் சேர்த்து குடங்களில் புளிக்க வைத்து பீர் தயாரித்து வந்ததை கண்டறிந்தனர். 

பீர் குடங்களை கைப்பற்றிய போலீசார். மேரியைக் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் மேரி கொரோனா லாக்டவுன் நேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வீட்டிலேயே பீர் தயாரித்து விற்க முடிவு செய்துள்ளார். இதற்கான பொருட்களை வாங்கி வீட்டிலேயே குடங்களில் பீர் தயாரித்து ஏக்கச்சக்கமாக கல்லா கட்டியுள்ளார். ஏற்கனவே குற்றவழக்குகளில் 4 முறை சிறை சென்றுள்ள மேரி, தற்போது ஜாமீனில் வெளியே வந்த உடனேயே, பீர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு கையும் களவுமாக போலீசில் சிக்கியுள்ளார். மது விலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் மேரியை தற்போது புழல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேரியுடைய மகன்களான சாலமன், ராஜ்குமார் ஆகியோரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 60 லிட்டர் திராட்சை பீர், அதை தயாரிக்க தேவையான பொருட்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 

click me!