ரயில் சைதாப்பேட்டை நின்றுவிட்டு புறப்பட தயாராக இருந்த போது மின்சார ரயிலில் இருந்த 8 பெட்டிகள் அடுத்தடுத்து பின்னோக்கு சென்றது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றுக்கொண்டிருந்த மின்சார ரயிலில் அடுத்தடுத்து 8 பெட்டிகள் கழன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இன்று காலை 5:35 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தது. ரயில் சைதாப்பேட்டை நின்றுவிட்டு புறப்பட தயாராக இருந்த போது மின்சார ரயிலில் இருந்த 8 பெட்டிகள் அடுத்தடுத்து பின்னோக்கு சென்றது. இதனை கண்ட பயணிகள் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது என நினைத்து அலறினர். இதனால், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
undefined
இதையும் படிங்க;- Srimathi Case: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு..! வெளிவந்த பல அதிர்ச்சி தகவல்கள்..!
இதனையடுத்து, கழன்று சென்ற பெட்டிகளை ரயிலுடன் இணைக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், 30 நிமிடங்களுக்கு மேலாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இதையும் படிங்க;- மரக்காண மது மரண மர்மங்கள்.! ஒரு லட்சம் கோடி ஊழலை மறைக்க அரங்கேற்றப்பட்ட சதியா? கிருஷ்ணசாமி பகீர் தகவல்.!