விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வேளச்சேரி காவல் நிலையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வேளச்சேரி காவல் நிலையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக விசிக கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது, அங்கிருந்த வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் தாக்கியதாக நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் வேதா அருண் நாகராஜன் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா.! புரட்சி தளபதியை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜூ.!!
இதை அடுத்து வீரப்பன், திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை முயற்சி, திருட்டு, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்கில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுத்தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: கருணாநிதி நூற்றாண்டு விழா..! தேசிய தலைவர்களை ஒன்றிணைக்கும் திமுக- உயர்நிலை செயல்திட்ட கூட்டத்திற்கு அழைப்பு
அப்போது வழக்கில் புலன் விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இவ்வளவு நீண்ட காலம் எடுத்துக் கொண்டது ஏன் என புரியவில்லை என்று தெரிவித்த நீதிபதி சந்திரசேகரன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.