சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்! 3 பேர் அதிரடி கைது! என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumar  |  First Published May 12, 2023, 1:11 PM IST

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்த அருண்குமார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு இரு மகள் உள்ளனர். மூத்த மகள் மகாலட்சுமி (19) தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். 


சென்னையில் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.30,000 இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்த அருண்குமார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு இரு மகள் உள்ளனர். மூத்த மகள் மகாலட்சுமி (19) தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இளைய மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். இதில் அவர், ரூ.30.000 வரை பணத்தை கட்டி இழந்துதுள்ளார்.  இதனை அறிந்த தாய் குடும்ப கஷ்டத்தில் இருக்கும்போது இப்படி பணத்தை இழந்துவிட்டாயே என்று திட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் மனவேதனை அடைந்த மகாலட்சுமி, கடந்த மாதம் 2-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தாவை சேர்ந்த அமானுல்லா கான்(20), முகமதுபாசில்(21), முகமது ஆசிப் இக்பால்(22) ஆகிய 3 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

click me!