குப்பை கொட்டினால் அபாராதம்... சென்னை மாநகராட்சி அதிரடி!!

Published : May 14, 2023, 06:21 PM IST
குப்பை கொட்டினால் அபாராதம்... சென்னை மாநகராட்சி அதிரடி!!

சுருக்கம்

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!!

ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மே 11 ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்து 90 ஆம், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.9 லட்சத்து 93 ஆயிரத்து 300 அபராதமும் என மொத்தமாக ரூ.21 லட்சத்து 48 ஆயிரத்து 390 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை பெறுவது எப்படி? முழு விபரம்

எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொது இடங்கள் மற்றும் காலி மனைகளில் அதிக குப்பைகள் காணப்பட்டால் சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!