சென்னையை மிரட்டிய கனமழை.. அவசர உதவிக்கான வாட்ஸ் ஆப் நம்பர் இதுதான்.. மாநகராட்சி அறிவிப்பு..

By Ramya s  |  First Published Nov 30, 2023, 12:55 PM IST

சென்னையில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி இலவச உதவி எண்களை வெளியிட்ட நிலையில் தற்போது கூடுதலால வாட்ஸ் அப் எண்ணையும் வெளியிட்டுள்ள


சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. கனமழையால் சென்னை முழுவதும் 145 இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், மழை நீரை அகற்றும் பணியில் சுமார் 16,000 ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள இடங்களில் தண்ணீரை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் மழை தொடர்வதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் மழை தொடர்பான புகார்களை அளிக்க 1913 என்ற இலவச உதவி எண்ணை நேற்றிரவே அறிவித்திருந்தது. மேலும் 044 – 25619204, 044 – 25619206, 044 – 25619207,  ஆகிய எண்களில் புகாரளிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி இலவச உதவி எண்களை வெளியிட்ட நிலையில் தற்போது கூடுதலால வாட்ஸ் அப் எண்ணையும் வெளியிட்டுள்ளது. அதன்படி 94454 77205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Heavy Rain: இரண்டு உயிர்களை காவு வாங்கிய சென்னை மழை..!

அதே போல் சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திற்க்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான புகார்களை தெரிவிக்க 044 4567 4567 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

click me!