வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக இருவேறு இடத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகள், பாலங்கள், சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கின. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் இரவு பகல் பாராமல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க;- இன்றும் சம்பவம் இருக்கு.. சென்னையில் இன்றைய மழை நிலவரம் எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்..
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னையில் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் சாலையில் நடந்து சென்ற மணிகண்டன் என்ற வாலிபர் திடீரென உயிரிழந்துள்ளார். இவர் கையில் வைத்திருந்த செல்போன் கருகிய நிலையில் இருந்ததால் இவர் மின்சாரம் தாக்கி உயிழந்தாரா அல்லது மின்னல் தாக்கி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் அசோக் நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- Today Gold Rate in Chennai : நேற்று 720 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
இதேபோல, தியாகராயநகர் வானி மஹால் அருகே நடந்து சென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்பு அனிப் என்பவர் மழைக்கு ஒதுங்கியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் பெய்த கனமழையால் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.