செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 500 அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3,098 கனஅடியாக உயர்ந்துள்ளது.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து உபரி நீர் திறப்பு 6,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சுற்றியுள்ள நீர்நிலைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளது.
இதையும் படிங்க;- சென்னை உள்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 500 அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3,098 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று காலை 1,000 உயர்த்தப்பட்ட பின்னர் நீர் வரத்து அதிகரித்தன் காரணமாக 1,500 கனஅடியாக உயர்த்தப்பட்ட நிலையில் கனமழை காரணமாக தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தன் காரணமாக காலை 8 மணியளவில் செம்பரபாக்கம் ஏரியில் 6,000 கனஅடி நீரை திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதன் காரணமாக ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை, மற்றும் அடையாறு ஆற்றின் கரையில் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதி வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் நீர்வரத்து மற்றும் கொள்ளவை பொதுப்பணித்துறை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.