சென்னையில் அதிர்ச்சி.. மழைக்காக ஒதுங்கிய வழக்கறிஞர்.. மின்சார தாக்கி தூக்கி வீசப்பட்டு பலி!

சென்னை கொரட்டூர் பாடி யாதவா தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(57). சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.  இவர் திமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர். 


சென்னையில் மழைக்கு ஒதுங்கிய முன்னாள் மாமன்ற உறுப்பினரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சம்பத் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொரட்டூர் பாடி யாதவா தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(57). சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.  இவர் திமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர். இந்நிலையில், வழக்கம் போல கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியில் காலையில் நடைபயிற்சி கொண்டிருந்தார்.  அப்போது திடீரென மழை பெய்ததால் கோயில் அருகே உள்ள கம்பெனி வாசலில் மழைக்காக ஒதுங்கி போது எதிர்பாராத மின்சாரம் தாக்கி அலறியபடி தூக்கி வீசப்பட்டார். 

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொரட்டூர் போலீசாருக்கு ததகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- School College Holiday: வெளியான மாஸ் அறிவிப்பு.. பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை.!

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!