ஐயயோ.. என்ன சொல்றீங்க... சென்னையில் தடுப்பூசி போட்ட ஆசிரியைக்கு கொரோனா..!

Published : Mar 21, 2021, 02:13 PM IST
ஐயயோ.. என்ன சொல்றீங்க... சென்னையில் தடுப்பூசி போட்ட ஆசிரியைக்கு கொரோனா..!

சுருக்கம்

சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடி  அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு  9 மற்றும் 10ம் வகுப்பு படித்துவரும் 55க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு,  11 ஆசிரியர்கள் பணிக்கு வந்து  செல்கின்றனர். இதற்கிடையில், பள்ளியில் கடந்த 6ம் தேதி அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 16ம் தேதி ஆவடி சின்னம்மன் கோயில் தெருவில் வசிக்கும் ஆசிரியைக்கு திடீரென உடல்சோர்வு ஏற்பட்டதால் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே ஓய்வெடுத்துள்ளார். அத்துடன் அவர் கொரோனா பரிசோதனையும்  மேற்கொண்டார். அதில் ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, ஊராட்சியில் உள்ள தூய்மை  பணியாளர்கள் பள்ளி முழுவதும் கிருமிநாசினி  தெளித்தனர்.  தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!