நாகர்கோவில் - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த அந்தியோதயா விரைவு ரயில் சேவை வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை முழுவதும் ரத்து.
சென்னை ரயில்வே கோட்டத்தின் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து தாம்பரம், எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த ரயில்களின் சேவையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் காரணமாக வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
இந்நிலையில், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போன்று மறு மார்க்கத்தில் தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் ஆகஸ்ட் 1 முதல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்; ஓங்கும் கமலா ஹாரிசின் கை - முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு கரம்
இதே போன்று எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை விரைவு ரயில் ஆகஸ்ட் 1 முதல் 14ம் தேதி வரை எழும்பூருக்கு பதில் செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணி காரணமாக தாம்பரம் வழியாக செல்லும் சில ரயில் சேவைகள் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.