தமிழகத்தின் தலை நகர் சென்னையில் உள்ள கத்திபாரா மேம்பாலம் தான் ஆசியாவின் மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவ மேம்பாலம். இந்த மேம்பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தலை நகர் சென்னையில் உள்ள கத்திபாரா மேம்பாலம் தான் ஆசியாவின் மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவ மேம்பாலம். இந்த மேம்பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். முக்கிய சாலைகளை இணைக்கும் மேம்பலாம் என்பதால் எந்நேரமும் வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். இந்த மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவனை கரெக்ட் செய்து டியூசன் ஆசிரியை உல்லாசம்! விஷயம் தெரிந்த பெற்றோர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை திடீரென நிறுத்திவிட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்துள்ளார். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வீக் எண்ட் விடுமுறை! சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு டென்ஷன் இல்லாமல் போகலாம்! போக்குவரத்துறை அதிரடி ஏற்பாடு!
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொண்டவர் யார் எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் விருகம்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் ராஜ்(24) என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.