அமலாக்கத்துறை சோதனை... வீட்டில் நடந்தது என்ன.? ஆதவ் அர்ஜூனா பரபரப்பு விளக்கம்

By Ajmal Khan  |  First Published Mar 11, 2024, 6:15 AM IST

சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். 


ஆதவ் அர்ஜூனா வீட்டில் சோதனை

பிரபல தொழில் அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில்  அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அவ்வப்போது சோதனை நடத்தி கணக்கில் காட்டப்படாத முக்கிய ஆவணங்களை கைப்பற்றும், இந்தநிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருகனும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனாவின் சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வீட்டில் வீட்டிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் தெருங்கும் நிலையிலும், விடுதலை சிறுத்தை கட்சியில் பொறுப்பு பெற்றதை தொடர்ந்தும் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியது.  

Latest Videos

undefined

சோதனையில் நடந்தது என்ன.?

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. நேற்று முன்தினம் (09.03.2024) காலை தொடங்கி நேற்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது. பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனடிப்படையில் சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது.

என் மடியில் கனமில்லை

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று உறுதியோடு எனது பயணம் தொடரும் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

விசிக துணை பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. யார் இந்த ஆதவ் அர்ஜுனா?

click me!