வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென மயங்கி விழுந்த கிராம உதவியாளருக்கு நிகழ்ந்த சோகம்; அரியலூரில் பரபரப்பு

By Velmurugan sFirst Published Jun 3, 2024, 12:16 PM IST
Highlights

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் கிராம உதவியாளர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் இருப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

பூம்புகார்: நனவாகுமா கலைஞரின் கனவு - ரவிக்குமார் எம்.பி.!

Latest Videos

இதில் வெண்மான்கொண்டான் கிழக்கு வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக இருக்கும் ராஜேஸ்வரி என்பவரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றினார். பணியின் போது நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை உடன் பணியாற்றிய அலுவலர்கள்  அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார்.

கன்னியாகுமரியில் உதிக்கும் சூரியன் என் எண்ணங்களை உயர்த்தியது: பிரதமர் மோடியின் மனம் திறந்த கடிதம்!

இதுகுறித்து உடையார்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரியின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியில் இருந்த போதே ராஜேஸ்வரி உயிரிழந்த சம்பவம்  சக  ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!