திடீரென பேச்சை நிறுத்திய காதலி; சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய விசிக பிரமுகரின் செல்லப்பிள்ளை - அரியலூரில் பரப

By Velmurugan s  |  First Published May 29, 2024, 6:33 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இளம் பெண் பேச மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நரசிங்கபாளையம் கிராமம், காலனி தெருவை சேர்ந்தவர் அருமை ராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் பிரேம்குமார் (வயது 21) டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார். மேலும் இவர் அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கும், இவருக்கும் மன வருத்தம் இருந்ததாகவும், அதன் காரணமாக இளம்பெண் பிரேம்குமாரிடம் பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

பணத்திற்காக மனைவியை மற்றொருவருக்கு திருமணம் செய்துவைத்து மோசடி; முதலிரவு முடிந்ததும் ஷாக் கொடுத்த புதுமணப்பெண்

Latest Videos

இந்நிலையில் ஊருக்கு செல்வதற்காக அந்தப் பெண் பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பிரேம்குமார், அவ்வழியாக காட்டுமன்னார்குடியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் நரசிங்கபாளையம் காலனி பஸ்  நிறுத்தத்திற்கு அருகே வருவதற்கு முன்பாக சாலையில் பெட்ரோல் குண்டை வீசி உள்ளார். 

பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கிய இஸ்லாமியர்களின் செயலால் நெகிழ்ச்சி

அப்போது பெட்ரோல் குண்டு வெடித்து எரிந்ததை பார்த்த பேருந்து ஓட்டுனர் முன்னெச்சரிக்கையாக நிறுத்திக் கொண்டார். பின்னர் பிரேம்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து பெட்ரோல் குண்டு வீசிய பிரேம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!