yuzvendra chahal ipl: யஜுவேந்திர சஹலை டான்ஸராக மாற்றும் தனஸ்ரீ வர்மா: இன்ஸ்டாகிராமல் கலக்கல் வீடியோஸ்

Published : Apr 21, 2022, 11:46 AM IST
yuzvendra chahal  ipl: யஜுவேந்திர சஹலை டான்ஸராக மாற்றும் தனஸ்ரீ வர்மா: இன்ஸ்டாகிராமல் கலக்கல் வீடியோஸ்

சுருக்கம்

yuzvendra chahal  ipl: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹல் பந்துவீசுவதற்கு அதிக நேரம் பயிற்சிஎடுப்பதோடு நடனமாடவும் பயிற்சி எடுத்து வருகிறார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹல் பந்துவீசுவதற்கு அதிக நேரம் பயிற்சிஎடுப்பதோடு நடனமாடவும் பயிற்சி எடுத்து வருகிறார். 

அவரின் மனைவி தனஸ்ரீ வர்மாதான் சஹலுக்கு எளிமையான நடன அசைவுகளைக்கற்றுக்கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார்.
சஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவின் இன்ஸ்டாகிராமை பின்தொடர்பவர்களுக்குத் தெரியும், அவர் தனது அன்றாட விவரங்கள் அனைத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். தனஸ்ரீ நேற்று தனது இன்ஸ்டாவில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.அதில், தனது கணவர் யஜுவேந்திர சஹலுக்கு எளிமையான சில நடன அசைவுகளைக் கற்றுக்கொடுத்து அவர் அதை ஆடவும் வைத்திருந்தார்.

 ஐபிஎல் பயோ-பபுளில் இருக்கும் சஹல், தனஸ்ரீ தம்பதி, இந்த வீடியோ தங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றனர். தனஸ்ரீ பதிவேற்ற சில மணிநேரங்களில் 3 லட்சம் லைக்குகள் இந்த வீடியோவுக்கு கிடைத்தன.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதோடு, அவ்வப்போது ஸ்னிபெட்டுடன் சேர்த்து தனஸ்ரீ போடும் வீடியோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அந்தவகையில் சஹலுடன் சேர்ந்து தனஸ்ரீ ஆடிய வீடியோ தொகுப்புக்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது. அந்த வீடியோவில் தனஸ்ரீ குறிப்பிடுகையில் “ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி. ஒரு வீட்டைப்போல், குடும்பத்தைப் போன்ற சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த இங்கிலாந்து வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான ஜாஸ் பட்லரும், “ நைஸ் ஸ்டெப்ஸ்” எனப் பாராட்டியுள்ளார்.

மேலும், நெட்டிசந்களில் ஏராளமானோர் தனஸ்ரீயும், சஹலும் சேர்ந்து ஆடும் வீடியோவைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். ஐபிஎல் தொடருக்காக அதிகமான நேரம் சஹல் பயிற்சி எடுக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை, தனது மனைவியின் உத்தரவுக்கு ஏற்ப நடனத்துக்கு அதிகமெனக்கெட்டு பயிற்சி எடுத்துவருகிறார்..
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!