மும்பை வாழ் தமிழர்களுக்கான 5 ஓவர் கிரிக்கெட் போட்டி..! ஆர்வமாக கலந்து கொண்ட இளைஞர்கள்

Published : Dec 19, 2022, 10:55 AM IST
மும்பை வாழ் தமிழர்களுக்கான 5 ஓவர் கிரிக்கெட் போட்டி..! ஆர்வமாக கலந்து கொண்ட இளைஞர்கள்

சுருக்கம்

மும்பை வாழ் தமிழர்களுக்கான 5 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு 50ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.  

மும்பை தமிழர்களுக்கான போட்டி

கிரிக்கெட் போட்டிக்கு இளைஞர்களிடம் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் மும்பையில் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பாக முலூண்ட் பகுதியில் உள்ள ராஜே சம்பாஜீ மைதான் பகுதியில் மும்பையில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து முதல்முறையாக சிவந்தி ப்ரீமியர் லீக் ஒருநாள் கிரிக்கெட் போட்டி  நடைபெற்றது. 5 ஓவர் போட்டியாக நடைபெற்ற இந்த பிரிமியர் லீக்கில் 6 அணிகள் கலந்து கொண்டன.

IPL Mini Auction 2023: அடிப்படை விலை வாரியாக ஏலத்தில் இடம்பெறும் மொத்த வீரர்களின் லிஸ்ட்

இளைஞர்கள் ஆர்வம்

இந்த கிரிக்கெட் போட்டியை வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து போட்டியை மும்பை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும்  முன்னாள் நகர் வளர்ச்சித்துறை சேர்மன் ஆகிய பிரகாஸ் கங்காதரே தொடங்கிவைத்தார். இந்த பொட்டியில் முதல் பரிசு வென்றவர்களுக்கு வெற்றிக்கோப்பை உடன் 51 ஆயிரம் ரூபாய் காசோலை பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு வென்றவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் காண காசோலை வழங்கப்பட்டது. மும்பை வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து முதல்முறையாக சீசன் 1 என்கின்ற இந்த கிரிக்கெட் போட்டியானது வரும் காலங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படியுங்கள்

AUS vs SA: 91 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த அரிதினும் அரிதான சம்பவம்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!