பிரான்ஸுக்கு எதிராக நடந்த 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் ஃபெனால்டி ஷூட் அவுட் முறையில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்ற பிறகு இனி அர்ஜெண்டினா அணியிலிருந்து விலகுவதாக இல்லை என்று மெஸ்ஸி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கத்தார் நாட்டில் 22ஆவது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், நடப்பு சாம்பியன் பிரான்ஸும், லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக ஆடிய அர்ஜெண்டினா அணி முதல் பாதியில் 2 கோல்கள் அடித்தன. கிடைத்த ஃபெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட மெஸ்ஸி கோலும், மரியா ஒரு கோலும் அடித்தனர்.
undefined
பின்னர், 2ஆம் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் கோல் அடிக்க முயற்சித்தும் பலனில்லை. இதையடுத்து, போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் கிடத்த ஃபெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். அடுத்து சில நிமிடங்களிலேயே மற்றொரு கோலும் அடிக்க போட்டி முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
இறுதியாக போட்டியின் முடிவை தீர்மானிக்கும் வகையில் அரைமணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த நேரத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட மெஸ்ஸி கோல் அடித்தார். அதே போன்று பிரான்ஸ் வீர்ரரும் கோல் அடித்தார். இதனால் மீண்டும் போட்டி 3 - 3 என்று சமநிலை ஆனது. கடைசியாக வழங்கப்பட்ட ஃபெனால்ட்சி ஷூட் அவுட்டில் அர்ஜெண்டினா 4 கோல்களும், பிரான்ஸ் 2 கோல்களும் அடிக்கவே, அர்ஜெண்டினா அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு 3 ஆவது முறையாக வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது.
இதற்கு முன்னதாக கடந்த 1978 ஆம் ஆண்டும், 1986 ஆம் ஆண்டும் அர்ஜெண்டினா அணி கோப்பையை கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பையை கைப்பற்றிய நிலையில் இது குறித்து மெஸ்ஸி கூறுகையில், தற்போது எனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் ஜெர்மணிக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை போட்டியில் தோல்வியைச் சந்தித்த நிலையில், எனது நேரம் வந்துவிட்டது என்று நினைத்து நான் வருத்தப்பட்டேன்.
ஆனால், எதற்கு நான் அப்போது வருத்தப்பட்டேன் என்று எனக்கு இப்போது தான் புரிகிறது என்று கூறியுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து இனி எனக்கு ஓய்வு என்பதே கிடையாது என்று மெஸ்ஸி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வெற்றிக் கோப்பையுடன் அணி வீரர்களையும், குடும்பத்தாரையும் கட்டியணைத்த தருணத்தை இந்த உலகமே ரசித்து வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அர்ஜெண்டினா அணிக்காக 172 போட்டிகளில் விளையாடி 98 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.