பிரான்ஸ் வீரர்களுக்கு வைரஸ் தாக்குதல் – இறுதிப் போட்டியில் என்ன செய்யப் போகிறது?

By Rsiva kumar  |  First Published Dec 15, 2022, 10:18 PM IST

பிரான்ஸ் கால்பந்து வீர்ர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


கத்தாரில் 22ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. வரும் 18 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கும், அர்ஜெண்டினா நாட்டிற்கும் இடையில் இறுதிப் போட்டி நடக்கவுள்ல நிலையில், பிரான்ஸ் வீர்ர்களுக்கு வைரஸ் தொற்று (Cold Virus – மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் பாதிப்பு) ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் கூறுகையில், நேற்று நடந்து முடிந்த மொராக்கோவிற்கு எதிரான போட்டிக்கு முன்னதாக டிஃபென்டர் தயோட் உபமென்கானோ மற்றும் மிட்ஃபீல்டர் அட்ரியன் ராபியோட் ஆகியோருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. ஆகையால் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

Pro Kabaddi League: அரையிறுதியில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

தற்போது வைரஸ் தாக்குதலிலிருந்து குணமாகி வரும் தயோட் உபமென்கானோ வரும் 17 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் பங்கேற்பார். இதற்கிடையில், ஃபார்வர்ட் வீரர் கிங்ல்சி கோமனுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வீர்ர்களுக்கு வைரஸ் தொற்று தாக்குதல் ஏற்பட்டு வருவதால், வீர்ர்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

எப்போ எப்படி ஆடணும்னு கோலிக்கு தெரியும்.. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்..! ராகுல் டிராவிட் புகழாரம்

தற்போது தொற்று காலம் என்பதால், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கத்தாரில் பயிற்சியின் போது அதிக குளிரூட்டப்பட்ட மைதானம் காரணமாக வைரஸ் தொற்று எளிதில் ஏற்பட்டுவிடுகிறது. கத்தாரில் உள்ள 8 மைதானங்களில் 7 மைதானங்கள் கட்டிடங்கள், உட்புறம் மற்றும் போக்குவரத்து ஆகியவை அதிக குளிரூட்டப்பட்டவை.

சுவிட்சர்லாந்திலும் கடுமையான குளிர் இருந்தது. செர்பியாவிற்கு எதிரான ஆட்டத்தின் போது இரண்டு தொடக்க வீர்ர்கள் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேக்கல, சத்தமா என்று கேட்ட லிட்டன் தாஸூக்கு சென்ட் ஆஃப் கொடுத்த விராட் கோலி, சிராஜ்!

click me!