
23-ஆவது உலக சீனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இன்று (அக்.24) தொடங்குகிறது. வரும் 30-ஆம் தேதி நிறைவடைகிறது.
இதில் இந்தியாவின் சார்பில் 17 வீரர்கள், 2 பயிற்சியாளர்கள், 3 ரெப்ரீக்கள் பங்கேற்கின்றனர். இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், பொதுச் செயலர் பாரத் சர்மா ஆகியோர் தலைமையில் இந்திய விளையாட்டுக் குழு பங்கேற்கிறது.
அணி விவரம்:
ஏ.எஸ்.விக்னேஷ் (தமிழகம், குமைட் -54 கிலோ), என்.ஹர்ஷா (தமிழகம், மகளிர் குமைட் -55 கிலோ), நயீம் கான் (ராணுவம், கட்டா), சந்தீப் ரதோட் (ராணுவம், குமைட் -61 கிலோ), அன்மோல் சிங் (ஹரியாணா, குமைட் -67 கிலோ), சுஷீல் கால்வின் (தில்லி, குமைட் -75 கிலோ), கெüரவ் சர்மா (ஐடிபிபி, குமைட் +64 கிலோ), அனிகெட் குப்தா, மனோஜ் தோயா, பாசு காரே ( மூவரும் தில்லி, ஆடவர் கட்டா அணி பிரிவு), தீபிகா திமான் (தில்லி, மகளிர் கட்டா தனிநபர் மற்றும் அணி பிரிவு), துரோப்தி தாக்குர் (மத்தியப் பிரதேசம், மகளிர் குமைட் -50 கிலோ), ரீனா ஜெயின் (மத்தியப் பிரதேசம், மகளிர் குமைட் -61 கிலோ), ஜானி மாங்கியா (அருணாசலப் பிரதேசம், மகளிர் குமைட் -68 கிலோ), சோனுன்மாவி (மிúஸôரம், மகளிர் குமைட் +68 கிலோ), ஸ்நேகா குசைன், ஈஸ்வரி ஜோஷி (இருவரும் தில்லி, மகளிர் கட்டா அணி பிரிவு).
பயிற்சியாளர்கள்:
எஸ்.ரவி (தமிழகம்), லிகதாரா (அருணாசலப் பிரதேசம்).
ரெப்ரீக்கள்:
எம்.கனகராஜ், கலைமணி, முத்துராஜ் (மூவரும் தமிழகம்).
மேற்கண்ட தகவல் இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.