உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள்!!  இந்தியாவில் இருந்த செலக்ட் ஆனவர் ஒருவர்தான்…… யார் தெரியுமா ?

 
Published : Jun 08, 2018, 10:40 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள்!!  இந்தியாவில் இருந்த செலக்ட் ஆனவர் ஒருவர்தான்…… யார் தெரியுமா ?

சுருக்கம்

world hundred top richerst players list by forbs

போர்ப்ஸ்  இதழ் வெளியிட்டுள்ள உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில்  இந்தியாவிலிருந்து  கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி  ஒருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். 

உலக புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் முதலிடத்தில் உள்ளார். அவருடைய மொத்த வருமானம் ரூ.1,906 கோடியாகும். கடந்த ஏழு ஆண்டுகளில் நான்காவது முறையாக அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, ரூ.743 கோடி வருமானத்துடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ, நெய்மர் அதற்கடுத்த இடங்களில் உள்ளனர். 



உலக அளவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 83-வது இடம் கிடைத்துள்ளது. . தோனி மற்றும் சச்சின் ஆகிய வீரர்கள் இந்த பட்டியலில்  இடம் பெறவில்லை. இந்தியாவில் இருந்து இடம் பெற்ற ஒரே ஒரு வீரர் கோலி மட்டுமே. 

விராட் கோலி  ஆண்டுக்கு ரூ.160.95 கோடி சம்பாதிக்கிறார். சமீபத்தில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பளத்தை உயர்த்தி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார். டிவிட்டரில் 2.50 கோடி பேர் விராட் கோலியை பின் தொடர்கிறார்கள் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு பிசிசிஐ அமைப்பு விராட் கோலி உள்ளிட்ட 5 வீரர்களை ஏ பிளஸ் ஊதியம் பெறும் பட்டியலில் சேர்த்துள்ளது. இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.70 கோடி ஊதியம் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



பிரேசில் வீரர் நெய்மர் ஆண்டுக்கு 9 கோடி டாலர்கள் வருமானம் ஈட்டி, 5-வது  இடத்தைப் பிடித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர்  ரோஜர் பெடரர் 7-வது இடத்திலும், கூடைப்பந்தாட்ட வீரர் லிப்ரான் ஜேம்ஸ்  6-வது இடத்திலும், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 20-வது இடத்திலும் உள்ளனர். 

கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் 16-வது இடத்திலும், ரோரி மெக்ராய் 26-வது  இடத்திலும் உள்ளனர். இது தவிர முதல் 100 இடங்களில் என்பிஏ எனப்படும் கூடைப்பந்தாட்ட வீரர்கள் 40 பேர் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்கன் ரக்பி எனப்படும் என்எப்எல் போட்டியில் விளையாடும் 18 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் மாட் ரியான் ஆண்டுக்கு 6.75 கோடி டாலர் ஊதியம் பெற்று 9-வது இடத்தில் உள்ளார்.

100 பேர் கொண்ட பட்டியலில் ஒரு வீராங்கனை கூட இடம் பெறவில்லை. இதற்குமுன் பட்டியலில் இடம் பெற்றிருந்த சீனாவின் லீ நா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோரும் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?