காது அறுபட்ட கோலி!! ரசிகர்கள் சோகம்

Asianet News Tamil  
Published : Jun 08, 2018, 08:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
காது அறுபட்ட கோலி!! ரசிகர்கள் சோகம்

சுருக்கம்

kohli wax statue damaged

டெல்லி மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த விராட் கோலியின் மெழுகு சிலையில் காது பகுதியில் சேதம் ஏற்பட்டதால், சரிசெய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். சச்சினின் பெரும்பாலான சாதனைகளை நெருங்கிவிட்டார் கோலி. இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சக்தியாக கோலி விளங்குகிறார்.

இந்நிலையில், கோலியை கௌரவிக்கும் விதமாக, அவரது சொந்த ஊரான டெல்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலிக்கு மெழுகு சிலை ஒன்று அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. 

கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், மெஸ்சி, உசைன் போல்ட் ஆகியோருக்கு அடுத்தபடியாக விராட் கோலிக்குத்தான் அந்த அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டது.

அந்த மெழுகு சிலையை கண்டு மகிழ்ந்த கோலியின் ரசிகர்கள், அந்த சிலையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

இந்நிலையில், கோலி சிலையின் காது பகுதியில் சிறு சேதம் ஏற்பட்டிருக்கிறது. ரசிகர்கள் செல்ஃபி எடுக்கும்போது அந்த சேதம் ஏற்பட்டிருக்கலாம். இதையடுத்து அருங்காட்சியகத்திலிருந்து சிலை அகற்றப்பட்டு சரிசெய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!
கிரிக்கெட்டில் 'பேஸ்பால்' விதி: பேட்ஸ்மேன்களுக்கு இனி ஜாக்பாட்!