
19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கொட் அணியில் லிட்டில் மாஸ்டர் சச்சினின் மகள் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பிடித்துள்ளார்.
19-வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. இலங்கைக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய ஜூனியர் அணி விளையாடுகிறது. இந்த அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள், லிட்டில் மாஸ்டர் என வர்ணிக்கப்பட்டவர் சச்சின் டெண்டுல்கர். கடந்த 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றார். ஓய்வுக்கு பின் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது என சச்சின் இருந்து வருகிறார்.
இவரைப் போலவே அவரது மகன் அர்ஜுனும் கிரிக்கெட்டில் ஆர்வமாக உள்ளார். ஆனால் தந்தையை போல் பேட்ஸ்மேனாக இல்லாமல் ஆல் ரவுண்டராக முயற்சித்து வருகிறார்.
18 வயதாகும் இவர் தற்போது உள்ளூர் போட்டிகளில் அசத்தி வருகிறார். அதற்கு சான்றே இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடத்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.
மேலும் இங்கிலாந்து வீரர்களுக்கு பந்துவீசுவது, ஐபிஎல் போட்டிகளின் போது மும்பை வீரர்களுடன் வலைப்பயிற்சியில் ஈடுபடுவது என பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் தான், அர்ஜுனை 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
முதல்முறையாக அவர் இந்திய ஜுனியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவர் டிராவிட் பயிற்சியின் கீழ் முதல்முறையாக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.