கிரிக்கெட் பேட்டில் ஆபாச வார்த்தை!! சர்ச்சையில் சிக்கிய ஐபிஎல் அதிரடி வீரர்

 
Published : Jun 07, 2018, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
கிரிக்கெட் பேட்டில் ஆபாச வார்த்தை!! சர்ச்சையில் சிக்கிய ஐபிஎல் அதிரடி வீரர்

சுருக்கம்

jos buttler bat controversy

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரின் பேட் கைப்பிடியில் எழுதப்பட்டிருந்த ஆபாச வார்த்தையால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இங்கிலாந்து வீரரான ஜோஸ் பட்லர், நடந்து முடிந்த ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக ஆடினார். ஐபிஎல்லின் முதல் பாதியில் நடுவரிசையில் களமிறங்கியபோது சரியாக சோபிக்காத பட்லர், தொடக்க வீரராக களமிறங்கிய பிறகு அடித்து நொறுக்கினார். 

ராஜஸ்தான் அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றதற்கு பட்லரின் அதிரடியான ஆட்டம் மிக முக்கியமான காரணம். ஐபிஎல்லுக்கு பிறகு பாகிஸ்தான் அணியுடன் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றில் பாகிஸ்தானும் மற்றொன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பட்லர் பயன்படுத்திய பேட்டில் ஆபாச வார்த்தை எழுதப்பட்டிருந்தது. இது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஜோஸ் பட்லர், தமது பேட்டில் எழுதப்பட்டுள்ள இந்த வார்த்தையை பார்க்கும் போது, மைதானத்தில் மிக இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் சிறப்பாக விளையாட தூண்டும் என்பதற்காகவே அப்படி எழுதி வைத்ததாக தெரிவித்துள்ளார். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?